• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பேசும் குளிர்சாதனப் பெட்டியா???

உங்கள் குளிர்சாதன பெட்டியுடன் நீங்கள் எப்போதாவது உரையாடியிருக்கிறீர்களா? அல்லது உங்கள் அடுப்பு உணவு தயாராகி விட்டது என குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறதா? இது அறிவியல் புனைகதைகளைப் போல தோன்றலாம், ஆனால் உண்மையில் இது மிகவும் உண்மையானது.அவைதான் 'ஸ்மார்ட்' உபகரணங்கள்.

சமீபத்திய உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஒரு 'பேசும் மேஜை துணி' ஆகும்.அது அதன் மீது என்ன உணவு மற்றும் பானம் வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும். மேலும் எலக்ட்ரோடு சென்சார்கள் மற்றும் செயற்கை நுண் அறிவை பயன்படுத்தி, மேஜை துணி சமையல் குறிப்புகளை பரிந்துரைக்கும். ஊட்டச்சத்து தகவல்களை வழங்கும் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் அதில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு நினைவூட்டும்.


ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பத்தின் விற்பனையாளரான மேக்னட் கிச்சன்ஸின் ஸ்டூவர்ட் பேட்ஜர் கூறுகையில், "பேசும் உபகரணங்கள் முன்பை விட பிரபலமாக உள்ளன என்றார்.

ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டியில் ஒரு தொடுதிரை தென்படும்.அதில் ஒரு காலண்டர், ஷாப்பிங் பட்டியல் ஆகியவை இருக்கும். மேலும் இது உரையாடும் சமையல் புத்தகமாக செயல்படுகிறது. இது உள்ளே இருப்பதை அடிப்படையாகக் கொண்டு இரவு உணவிற்கு என்ன செய்யலாம் என பரிந்துரைக்கும் மற்றும் உணவு செய்முறையை விளக்கும்.



இந்த ஃப்ரிட்ஜ் உள்ளே, உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் ஒரு கேமரா உள்ளது.எனவே நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும்போது ஃப்ரிட்ஜில் என இருக்கிறது என்பதை சரிபார்க்கலாம். இதில் எனக்கு பிடித்த வசதி என்னவென்றால் ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டி, காலாவதி தேதிகளை கூட பதிவு செய்து,உணவை சாப்பிட நம்மை நினைவூட்டுகிறது.


இது 2,900 ஈரோ ஆகும்.இது மலிவானது இல்லை .எனினும், நீங்கள் ஒருபோதும் தனிமையாக இருக்க மாட்டீர்கள் - நீங்கள் எப்போதும் குளிர்சாதன பெட்டியுடன் அரட்டை அடிக்கலாம்.

Recent Posts

See All

பல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...

பல மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் டியோலிங்கோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சொன்னதை சொல்லும் கிளியின் உருவப்படத்தை வைத்திருக்கும் இந்த செயலி கற்போருக்கு சிறந்த நண்பனாக மாறுவதாக செயலியை ப

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 ..

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 என்ற ஹார்மோன் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எல்.சி.என் 2 ,உணவு உண்ட பிறகு திருப்தியை ஏற்

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios