தடுப்பூசி பற்றிய செய்திகள் உலகில் வலம்வர தொடங்கியதை அடுத்து, மக்களிடையே வெளிநாடுகளுக்கு செல்வதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.எனினும் ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ள தனித்துவமான விதிமுறைகள் குழப்புவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, ஸ்கைஸ்கேனர் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் பயண ஒழுங்குமுறைகளை வழங்குகிறது. இது நாடு வாரியாக விதிகளை காட்டுகிறது. நீங்கள் ஒரு நாட்டைக் கிளிக் செய்தால், அங்கு செல்ல தேவையான சமீபத்திய விதிமுறைகளை வரிசைப்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பதை தேர்ந்தெடுத்து அமெரிக்காவை கிளிக் செய்தால், இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் அமெரிக்காவில் நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை(குறிப்பிட்ட காரணங்களை தவிர) என்று குழு உங்களுக்குத் தெரிவிக்கிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்தால், நீங்கள் இங்கிலாந்து திரும்பும்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இது உங்களுக்குத் தெரிவிக்கிறது.