ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்களே கிடையாது என்று பெண்கள் ஒவ்வொரு விதத்திலும் சாதித்து வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்களுக்கு தான் ராணுவம், கடற்படையில் பணி என்ற நிலை மாறி பெண்களுக்கும் சம பங்கு உண்டு என்ற அறிவிப்பு வந்த நாள் முதல் இந்த நாள் வரை 9,118 பெண்கள் முப்படைகளின் பணியாற்றுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மேலும் புதிதாக 1700 பெண்களுக்கு ராணுவப்பிரிவில் பணி வழங்க திட்டம் போடப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுப்பங்கரையில் முடங்கி கிடந்த பெண்கள் இன்று முப்படைகளிலும் சென்று கலக்குவதை பார்க்கும் போது நம்மால் நாட்டின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது.