• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மலரும் பூக்களை யார் தடுக்க முடியும்??

வைரஸ் காற்றில் பரவினாலும் அதிர்ஷ்டவசமாக, ஷில்லாங் நகரத்தின் இளஞ்சிவப்பு நிற மலர்களின் அழகை வைரஸால் குறைக்க முடியவில்லை. 2020 பல நல்ல விஷயங்களிலிருந்து நம்மைத் தடுத்திருக்கலாம் எனினும் ஷில்லாங் பூப்பூத்தல் அந்த பட்டியலில் இல்லை.

இது தொற்றுநோயாக இல்லாதிருந்தால், உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ​​மேகலாயாவில் உள்ள ஷில்லாங் நகரிற்கு பறந்திருப்பார்கள். இந்த வருடம் அதன் அழகை காண குறைவான கூட்டம் இருந்தாலும், மலர்கள் தொடர்ந்து பூக்கின்றன. அவை மிகவும் அழகாக இருக்கின்றன. இத்தகைய மகிழ்ச்சியான மலர்கள் ப்ரூனஸ் செராசாய்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.இது இமயமலையின் ஒரு பரிசு என்றே அனைவராலும் கருதப்படுகிறது. பொதுவாக இந்த பூக்கள் கிழக்கு மற்றும் மேற்கு மலைகள் முழுவதும் உருவாகிறது. கடந்த ஆண்டு வரை ஷில்லாங்கில் செர்ரி மலரும் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் . சுற்றுலாப் பயணிகள் கூட்டமாகவும், நடன போட்டிகள், உணவு வகைகள், ஒயின், கலை மற்றும் கைவினை போன்ற பிற செயல்பாடுகளுக்கிடையில் இசையோடு சிறப்பாக கொண்டாடி வந்ததாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios