டிக்டாக்கில் தோன்றிய பின்னர் சாஷா ஒபாமா இப்போது மீண்டும் வைரலாகிவிட்டார்.இந்த முறை தனது நண்பர்களுடன் நடனமாடுவதைக் காட்டும் ஒரு கிளிப் வெளியிட்டுள்ளார். இது டிக்டோக்கிலிருந்து நீக்கப்பட்டு பின்பு ட்விட்டரில் மறுபதிவு செய்யப்பட்டது. அந்த குறுகிய வீடியோவில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் தனது ஆறு நண்பர்களுடன் ஒரு பிரபலமான பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான 19 வயதான சாஷாவை டிக்டோக் பயனர்கள் அங்கீகரித்த சிறிது நேரத்திலேயே, அவரது பெயர் ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கியது. வீடியோ புதன்கிழமை நிலவரப்படி 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டது. சாஷாவின் அரிய காட்சி, ஏராளமான மக்களை வீடியோவை பகிர தூண்டியது.