ஒரு அன்னப்பறவை ஒத்த கப்பலைத் தயாரிக்கும் கருத்தை வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு, லாசரினி டிசைன் ஸ்டுடியோ ஒரு சுறா வடிவிலான பெரிய கப்பல் தயாரிக்க உள்ளதாக உறுதியளித்து உள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் 153 மீட்டர் அளவைக் கொண்டு, கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட உள்ளது.

வடிவமைப்புக் குழுவின் கூற்றுப்படி, இது சுறாவை "கடல்களின் பேரரசர்" என்று பெருமை சூட்டும்படியான ஒரு செயல். ஆடம்பர கப்பலில் ஒரு நேரத்தில் சுமார் 40 விருந்தினர்களை தங்க வைக்க முடியும். மேலும் விருந்தினர்களை மகிழ்விக்க நிறைய உள்ளன. உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் கீழ் பகுதியில் அமைய உள்ளது .