ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் சேவை நாய் சல்லி தனது சொந்த சிலையை பெற்றுள்ளது.
ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் அன்பான முன்னாள் சேவை நாயின் சிலை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. புகழ்பெற்ற சிற்பி சூசன் பஹாரியால் இந்த கலைப்படைப்பு வடிவமைக்கப்பட்டது. இந்த வெண்கல சிலை அமெரிக்காவின் வெட்ட்டாக்ஸ் வளாகத்தில் வைக்கப்பட்டது.

புதிய சிலையை திறப்பதற்காக செவ்வாய்க்கிழமை சல்லி கலந்து கொண்டது.சல்லி உட்கார்ந்த நிலையில் தனது வாயை சாய்த்துக் கொண்டு தனது அதிகாரப்பூர்வ அமெரிக்காவின் பெரிய முத்திரையை உள்ளடக்கிய சேவை உடையை அணிந்துள்ள வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புஷ் மரணத்தின் பின்,சல்லி மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் பணியாற்றி வருகிறது. ஒரு புதிய நிலைக்கு சல்லி நகர்ந்தாலும், புஷ் குடும்பத்துடன் செலவழித்த நாட்களை சல்லி மறக்கவில்லை.சல்லிநேற்று ஜென்னா புஷ் ஹேகர் மற்றும் அவரது மகள்களான பாப்பி லூயிஸ், 5, மற்றும் மிலா, 7, ஆகியோருடன் ஒரு வீடியோ அழைப்பில் பேசியது.