ஐ.ஐ.டி-கான்பூரின் பழைய மாணவரான ஒரு மூத்த குடிமகன் மத்திய பிரதேசத்தின் தெருக்களில் பிச்சை எடுப்பது தெரியவந்துள்ளது. குரேலியர் மாவட்டத்தில் சாலையோரத்தில் சுரேந்திர வசிஷ்டர் என அடையாளம் காணப்பட்ட 90 வயது நபர் கண்டுபிடிக்கப்பட்டார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான அறிக்கையின்படி, அந்த முதியவர் இப்போது ஸ்வர்க் சதன் ஆஷ்ரமத்தில் உள்ளார் .

"நாங்கள் அவரை பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் மிகவும் பரிதாப நிலையில் கண்டோம். நாங்கள் அவருடன் பேசியபோது, அவருக்கு நாங்கள் ஆங்கிலத்தில் பேசுவது புரிந்தது. நாங்கள் அவரை எங்கள் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து அவருடைய உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்" என்று விகாஷ் கோஸ்வானி கூறினார் .
1969 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி-கான்பூரில் இயந்திர பொறியியல் படித்த பின் லக்னோவில் எல்.எல்.எம். ஆகியவற்றை முடித்ததாக சுரேந்திரர் கூறினார். 1990 களில் மூடப்பட்ட ஜே.சி ஆலைகளில் அவரது தந்தை ஒரு சப்ளையர்.