• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உனக்கு இருக்க அறிவுக்கு நீ எங்கையோ போக போற! -விஞ்ஞானிகளாக உருவெடுக்கும் ஊட்டியில் வாழும் காக்கைகள்!

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் குளிர் வாட்டி எடுக்கிறது. குளிர் என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா? என்று சற்று சிந்தித்து பார்த்தால் கண்டிப்பாக இல்லை. இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் இந்த குளிரை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்களாகிய நாம் குளிரில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்காக கம்பளி போன்ற போர்வைகளை போற்றி கொள்வோம். மலை பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தீ மூட்டி தங்களை கடும் குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வார்கள்.


வாயில்லாத ஜீவன்களும் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க என்ன செய்யும் என்று சிந்தித்து பார்த்தால் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டியதுதான்! ஏனென்றால் மனிதர்க்கு கூட வீடு இருக்கிறது. ஆனால் எத்தனை குருவிகளுக்கு, பேருந்துகளுக்கு, காக்கைகளுக்கு கூடு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. இந்த கடும் குளிரில் தன்னையும் தன் குஞ்சுகளையும் பாதுகாக்க ஒரு காக்கை செய்த முயற்சி அனைத்து விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



ஊட்டியில் பொதுவாக குதிரைகள் அதிகமாக வலம் வருவது வழக்கம். இந்த காக்கைகள் குதிரையின் மேல் உட்காருவது போல் உட்கார்ந்து அதன் ரோமங்களை எடுத்து கொண்டு சென்று அதன் கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு போர்த்தி விடுவதும், ரோமங்களில் உள்ள கதகதப்பின்னால் தன்னையும் தன குஞ்சுகளையும் குளிரிலிருந்து பாதுகாத்து கொள்கிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு மிக அழகானதாகவும் அறிவுபூர்வமாகவும் இருப்பதால் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.



Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios