இனி வரும் ஒவ்வொரு இரவுகளிலும் வியாழன் கோளும் சனி கோளும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.

சூரியனின் ஒரு முழு சுற்றுப்பாதையை முடிக்க சனிக்கு 29 பூமி ஆண்டுகள் எடுக்கும், வியாழனுக்கு 12 பூமி ஆண்டுகள் ஆகும். எனவே, ஏறக்குறைய ஒவ்வொரு 19 வருடங்களுக்கு பிறகு இரண்டு கோள்களும் நெருங்கி வருகின்றனர்.
மேலும் அதைப் பார்ப்பதை நீங்கள் தவறவிட்டால், அக்டோபர் 31, 2040 வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இத்தகைய அரிதான நிகழ்வை நீங்கள் பார்க்க விரும்பினால் டிசம்பர் 21,2020 அன்று சனிக் கோளை காண தென்மேற்கு திசையிலும், வியாழனை க்காண மேலும் சிறிது கிழக்கிலும் திரும்புங்கள்.
கடைசியாக இத்தகைய கோள்களின் நெருக்கம் 1623 ஆம் ஆண்டில் காணப்பட்டது, இப்போது கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவை மீண்டும் தோன்ற இருக்கிறது.எனவே உங்கள் காலெண்டர்களில் டிசம்பர் 21 ம் தேதியை குறித்து கொள்ளவும்.