புகழ்பெற்ற பேரரசர் ஷெர் ஷா சூரியால் (1486AD-1545AD) சோன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஐந்து நூற்றாண்டு பழமையான , 4 கி.மீ நீளமுள்ள கல் காஸ்வே சுதந்திரத்திற்குப் பிறகு பீகாரில் மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ) அதிகாரிகள் இதை 2016 இல் கண்டுபிடித்தபோது அது பெரிய அளவில் சேதமில்லாமல் நன்றாக இருந்தது.

இன்று, மணல் மாஃபியா தடையின்றி அதை அழித்து வருகிறது. கட்டமைப்பின் பல பகுதிகள் மிகப்பெரிய மணல் சுமக்கும் வாகனங்களின் எடையை பொறுக்காமல் கீழ் சரிந்து வருகின்றன. மேலும் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் டெஹ்ரிக்கும் அவுரங்காபாத் மாவட்டத்தில் பாருனுக்கும் இடையில் அமைந்துள்ள காஸ்வே கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் பல பெரிய கல் பலகைகள் காணவில்லை. முதலமைச்சர் நிதீஷ் குமார் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பேன் என்று சபதம் அளித்து இருந்தபோதிலும் இவை அனைத்தும் நடக்கின்றன. தலைவர் இன்னும் காஸ்வேயைப் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.