இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவகம் வெற்றிகரமாக சமோசாவை வானத்திற்கு அனுப்பியது. பாத் நகரின் சிறந்த உணவகங்களில் ஒன்றான சாய் வல்லா, மூன்று முயற்சிகளில் இதனை செய்துள்ளது. சாய் வல்லா உணவகத்தின் உரிமையாளர் நிராஜ் காதர், உற்சாகத்தை பரப்ப விரும்பி இவ்வாறு செய்ததாக கூறினார்.

உணவக உரிமையாளர் ஹீலியம் பலூன்களைப் பயன்படுத்தி பிரியமான சமோசாவை வானத்திற்கு அனுப்பினார். முதல் முறையாக, ஹீலியம் பலூன்கள் அவரது கைகளிலிருந்து நழுவின. "இரண்டாவது முறை போதுமான ஹீலியம் இல்லை. ஆனால் மூன்றாவது முறையாக அது சரியாக சென்றது," என்று அவர் கூறினார். யூடியூபில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, காதர் மற்றும் அவரது நண்பர்கள் சமோசாவை வானத்திற்கு அனுப்பியதை காட்டுகிறது. பலூனில் ஒரு கோப்ரோ கேமரா மற்றும் ஜி.பி.எஸ் டிராக்கர் பொருத்தப்பட்டது. இதன்மூலம் சமோசா வானை மோதி பின்பு பிரான்சில் விழுந்ததாக தெரியவந்துள்ளது. இந்த குழு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் மக்களுக்கு செய்தி அனுப்பத் தொடங்கியது. ஆக்செல் மத்தான் என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிகார்டி என்ற இடத்தில் சமோசாவைக் கண்டதாக கூறியுள்ளார்.