வீட்டுக்கல்விக்காக குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மடிக்கணினிகளில் வைரஸ் தாக்கியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கல்வித் திணைக்களம் (டி.எஃப்.இ) பிரச்சினையை போர்கால அடிப்படையில் பார்க்கிறது.

மடிக்கணினி இயக்கப்பட்டவுடன் அனைத்து செயலிகளும் திறந்து கொள்வது, பாதுகாப்பு அமைப்புகளை மாற்றுவது, இணையத்திலிருந்து தீங்கிழைக்கும் கோப்புகளைப் பதிவிறக்குவது மற்றும் ஹேக்கர்களுக்கு கணினிக்கு தொலைநிலை அணுகல் போன்ற பல்வேறு தேவையற்ற பணிகளை வைரஸலால் செய்ய முடியும். இது கடவுச்சொற்களை மற்றும் வங்கி தகவல்களைத் திருடலாம். உங்கள் குழந்தையின் பள்ளி பாதிக்கப்பட்டுள்ளது என்றால் இந்த மின்னஞ்சலுக்கு james.gant@mailonline.co.uk தகவல் தெரிவிக்கும்படி அந்நாட்டு மக்கள் கேட்கப்பட்டு உள்ளனர்.