முகமூடி அணிய மறுக்கும் பயணிகளை ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளாட் தனது விமானங்களில் குறிப்பிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. "அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் யூலியா ஸ்பிவகோவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட், முன்னர் அரசாங்கம் கூறும் வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியது. அதாவது பயணிகள் ஏறும் போதும், விமானத்தில் இருக்கும்போதும் முகமூடிகளை அணிய வேண்டும் என்று கூறியது. அவர்கள் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது முகமூடிகளை மாற்றவோ நேர்ந்தால் மட்டும் முகமூடி அணியாமல் இருக்கலாம் என்றது . இருப்பினும், சில பயணிகள் இந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

ஒரு விமானத்தை நடுப்பகுதியில் நிறுத்தி, பயணிகளை வெளியேற்ற முடியாது என்பதால் பயணிகள் விதிமுறைகளை சுலபமாக மீறினர். எனவே விமானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவர்களை தனிமைப்படுத்துவது, முகமூடி அணியாத பயணி ஒருவர் கொரோனா வைரஸை தங்கள் இருக்கை தோழர்களில் ஒருவருக்கு பரப்பும் வாய்ப்பை ஓரளவு குறைக்கலாம் என்கின்றனர், நிறுவனத்தினர்.