டாம் குரூஸ் ஒரு திரைப்படத்தின் காட்சியை உண்மையான இடத்தில் படமாக்கப்போவதாக அறிவித்த சில நாட்களில், ரஷ்யாவும் விண்வெளியில் ஒரு திரைப்படத்தை படமாக்கப்போவதாக அறிவித்துள்ளது. அதற்காக அவர்கள் முன்னணி நடிகர்களுக்கான சில விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளனர் . ரஷ்யாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி சேனல் - சேனல் ஒன் - தனது முதல் விண்வெளி படத்தை அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கான முன்னணி நடிகையை இறுதி செய்வதில் தயாரிப்பாளர்கள் தற்போது பரபரப்பாக உள்ளனர். ஆர்வமுள்ள வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டிய ரஷ்ய வலைத்தளம், இதற்கு அளவுகோல்களை வகுத்துள்ளது. அதில், "அவர் 25லிருந்து45 வயதுக்குள் இருக்க வேண்டும், அவளுடைய உயரம் 150-180 செ.மீ வரை இருக்க வேண்டும், உடல் எடை 50-75 கிலோ வரை இருக்க வேண்டும் மற்றும் 112 செ.மீ 'மார்பு சுற்றளவு' இருக்க வேண்டும்.மேலும் எந்த குற்றப்பதிவும் இருக்க கூடாது என அளவுகோல்களை வகுத்துள்ளது. ஒரே பிரச்சனை என்னவென்றால், ரஷ்ய குடிமக்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்படத்திற்கு தற்காலிகமாக 'சவால்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ரோஸ்கோஸ்மோஸ், சேனல் ஒன் மற்றும் மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும். படப்பிடிப்பு அக்டோபர் 2021 இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடைபெறும். டாம் குரூஸ் விண்வெளியில் ஒரு திரைப்படத்தை படமாக்குவார் என்று மே மாதம் நாசா உறுதிப்படுத்திய சில மாதங்களிலேயே ரஷ்யாவின் விண்வெளி படம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.