ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில், ஒரு மனிதன் தனது குழந்தையை தூக்கி
வைத்துள்ளான். மற்றொரு கூரையில், ஒரு பெண் மாலை வெளிச்சத்தில் செல்ஃபி எடுத்துக்கொள்கிறாள். சில அடி தூரத்தில், ஒரு சிறுவன் ஒரு பந்தைச் சுற்றி உதைக்கிறான். தண்ணீர் தொட்டியில் உட்கார்ந்திருக்கும் ஒரு குழந்தை மகிழ்ச்சியாக குளிக்கிறது. ஒரு பெண் தனது கணவனுக்கு தலை மசாஜ் கொடுக்கிறாள். இவை அனைத்தும் கொரோனா காலத்தில் மொட்டை மாடியில் நடந்த நிகழ்வுகள்.
ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் வசிப்பவர்,மது கோபால் ராவ். ஊரடங்கிற்கு முன்பு தனது அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு பெரும்பாலும் இவர் சென்றதில்லை. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்து மாடியில் படமெடுக்க துவங்கினார் . இதுவரை அவர் ஆறு மாதங்களில் 5,000 படங்களை எடுத்துள்ளார்.

இவரது படங்கள் தற்போது நடைபெற்று வரும் இந்திய புகைப்பட விழாவில் ‘ரூஃவ் டாப்’ என்ற தலைப்பின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன புகைப்படங்கள் அமைதியான, இயல்பான சமூக உணர்வைத் தூண்டுகின்றன.
விருது பெற்ற புகைப்படக் கலைஞரான ராவ், இந்தத் திட்டம் குறித்து தனக்கு முன்னராகக் நோக்கங்கள் எதுவும் இல்லை என்று கூறுகிறார்;
முதலில் தனக்கு நெருக்கமான கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் தன்னை கேமரா மூலம் அடையாளம் காணத் தொடங்கினர் என்று அவர் கூறுகிறார். இப்போது, என் இருப்பு அவர்களுக்கு மிகவும் பழக்கமாகிவிட்டது, அவர்கள் ஒரு கட்டத்திற்கு அப்பால் என்னைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். இது எனக்கு அழகான தருணங்களைக் படம்பிடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தது," என்று அவர் விளக்குகிறார்.