சமீபத்திய ஆய்வில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பம்பாய் (ஐ.ஐ.டி பம்பாய்) ஆராய்ச்சியாளர்கள் ரோட் கேர் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலி ஓட்டுநர்களுக்கு மோசமான சாலை நிலைமைகள் குறித்த எச்சரிக்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், காலப்போக்கில் சாலை தரத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கும் உதவும். இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மும்பை ஓஸ்வால் அறக்கட்டளை நிதியளித்தன.

சாலை நிலைமைகளை கணக்கெடுப்பதற்கான தற்போதைய நுட்பங்கள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் ரோட்கேர் குறைந்த நேரத்தில் சுலபமாக கணக்கிடுகிறது.
தரவுகளின் அடிப்படையில், செயலி சாலை தரத்தை 'நல்லது', 'நடுத்தரம்' அல்லது 'கெட்டது' என வகைப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு வாகனத்தால் சாலையின் ஒரு பகுதியின் மீது சுமூகமாக பயணம் செய்யமுடிந்தால் அதில் கடினமான திட்டுகள் இருந்தாலும், அந்த சாலை 'நல்லது' என வகைப்படுத்தப்படுகிறது.
இதற்கு ஜி.பி.எஸ்ஸை பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.