நீலகிரி மாவட்டம் வாழைதோட்டம் பகுதியில், வசிக்கின்ற மக்களுடன் 15 ஆண்டுகளாக சர்வ சாதாரணமாக பழகி வந்த யானைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த யானை ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் மட்டுமே நடக்கிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் தான் சில நாட்களுக்கு முன்பு தீ பந்தம் வீசியதால் ஒரு யானை இறந்துவிட்டது. அதே நிலை இந்த யானைக்கும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக வனத்துறையினர் இந்த யானைக்கு பிடித்த தர்பூசணி முதலிய கனிகளை வழியில் போட்டு யானையை முதுமலை காட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.
மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் மட்டுமே நடக்கும் இந்த யானையை பொறுமையுடனும் மிகுந்த அன்புடனும் வனத்துறையினர் அன்போடு அழைத்து செல்வது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
