அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற செல்வந்த நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மொத்தமாக எடுத்து கொண்டன. இதனால் பல நாடுகளுக்கு அதன் அணுகல் இல்லாமலே போய்விடும்.

பணக்கார நாடுகள் தங்கள் மக்கள்தொகைக்குத் தேவையானதை விட அதிகமான அளவுகளை ஒதுக்கியுள்ளன.அதே நேரத்தில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் ஐ.நா. ஆதரவுடைய கையகப்படுத்தல் திட்டத்தை நம்பியுள்ளன.அவை அதற்காக போராடக்கூடும். சமமற்ற தடுப்பூசி அணுகல், வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஆழமாக்கும் என்றும் இறுதியில் பணக்கார நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.