• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

டி. ஆர். பி. ரேட்டிங் மோசடியில் சிக்கிய செய்தி தொலைக்காட்சி...


போலி மதிப்பீட்டு மோசடியில் மும்பை காவல்துறையால் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைவர் விகாஸ் காஞ்சந்தானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 13 வது நபர் இவர் ஆவார். குழு மற்றும் அதன் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி ரிபப்ளிக் ஊடக வலையமைப்பை சொந்தமாகக் கொண்ட ஏ.ஆர்.ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த ஒரு வாரத்திற்குள் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"மகாராஷ்டிரா காவல்துறை எந்த ஊழியரையும் கைது செய்ய கூடாது என்றும் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் எனில் இதை நீங்கள் திரும்பப் பெறுவது நல்லது "என்று நீதிபதி டி.ஒய் சந்திரசூட் சேனலிடம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை விசாரித்த பின்னர், அதிக மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறும் ரிபப்ளிக் தொலைக்காட்சி - அதிக விளம்பர விகிதங்களைப் பெற மதிப்பீடுகளை மாற்றியமைப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் உள்ள குற்றப்பத்திரிகையில், தடயவியல் தணிக்கையாளர்கள் மற்றும் மதிப்பீடுகளை மதிப்பிடும் BARC அல்லது ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட 140 சாட்சிகள் உள்ளன .

இது குறித்து சேனல் கூறுகையில்,சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறையினருடன் மோதியதைத் கருத்தில் கொண்டு இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios