

தஞ்சாவூர் கீழ்வஸ்தா சாவடி அரசு பள்ளி அருகே பிரேமா நாகராஜ் என்பவர் தனது தாய் தந்தையோடு வசித்து வருகிறார் இந்நிலையில் பிரேமா நாகராஜ் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக வீட்டை காலி செய்ய வலியுறுத்தி பலமுறை கொலை மிரட்டல் வந்ததாக தெரிகிறது இதை அடுத்து இன்று அதிகாலை வீட்டை உறவினர்கள் தீ வைத்துக் கொளுத்தினர் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் தீ வைத்து கொளுத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரேமா நாகராஜ் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் எரிந்து நாசமாகி இருப்பதாக தெரியவருகிறது