கொரோனா ஊரடங்கு காரணமாக உலகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு போக முடியாமலும் , பாடத்தை கவனிக்க முடியாமலும் தவித்து வந்தனர். இதை கவனித்த எகிப்து நாட்டு சிறுமி என்ன செய்யலாம் என்று யோசித்து செயல்பட்ட விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. குறிப்பாக இந்த சிறுமியின் செயல் ஆசிரியர்களை அண்ணார்ந்து பார்க்க வைத்துள்ளது.

எகிப்து நாட்டில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்ற குழந்தைகளின் வீட்டிற்கு சென்று தனக்கு தெரிந்த பாடங்களை சொல்லி கொடுத்து வருகிறார் 12 வயதேயான ரீம்-கௌலி எனும் சிறுமி. வீடு வீடாக சென்று தனக்கு தெரிந்ததை கற்றுக்கொடுக்கும் இந்த சிறுமியின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் பாடம் சொல்லி கொடுக்குமாறு அமைந்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.