சவூதி அரேபியாவின் செங்கடல் மேம்பாட்டு நிறுவனம் இன்றுவரை பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
24 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு 500 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் திட்டத்தின் போக்குவரத்து இணைப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து டிஆர்எஸ்டிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜான் பகானோ கூறிகையில் "டிஆர்எஸ்டிசி,சவுதி அரேபிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஒரு பங்களிப்பு காரணியாகும். மேலும் இது விஷன் 2030 திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாங்கள் அடைந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்த முடிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்,என்றார்.
10,000 தொழிலாளர்கள் இருக்க கூடிய கட்டடம் முடிவுப் பெற உள்ளது.
கடந்த ஜூலை மாதம், டி.ஆர்.எஸ்.டி.சி 2022 ஆம் ஆண்டில் திறக்கப்படவுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கான வான்வழி உள்கட்டமைப்பு பணிகளுக்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது இரண்டு முன்னணி சவுதி ஒப்பந்தக்காரர்களான நெஸ்மா மற்றும் அல்மபானி ஒப்பந்தக்காரர்களுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.