• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மகளை ஜிம்மிற்கு கூட்டிச் செல்லும் தந்தை

ரஷான் ஸ்டேக்கர் என்பவர் கோச் ஸ்டாக்ஸ் என்றும் அழைக்கப்படும் நியூயார்க்கின் ஒரு தொழில்முறை உடல் பயிற்சியாளர் ஆவார். மே 5 அன்று பிறந்த அவரது மகள் லோரன் கிரே,தந்தையோடு ஜிம்மிற்கு செல்கிறாள்.

அவள் பிறந்தவுடனேயே, ரஷான் ஜாகிங் செல்லும்போது அவளை ஒரு இழுபெட்டியில் அழைத்துச் செல்வார். மேலும் சில நேரங்களில் அவளுடைய சிறிய உடலை ஒரு எடையாகப் பயன்படுத்தி தூக்குவார். சில நேரங்களில், இரு கைகளும் தேவைப்படும் பயிற்சிகளைச் செய்யும்போது அவர் அவளை மார்பில் கட்டிக்கொள்கிறார். எனினும் அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் . அந்தச் சிறுமி முழு நேரமும் தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பதாக ரஷான் மகிழ்ச்சி அடைகிறார். ரஷான் செய்தியாளர் சந்திப்பில், குழந்தைகளைப் பெற்றிருக்கும் பெற்றோர்கள் அவர்கள் விரும்பியதை செய்வதை நிறுத்த தேவையில்லை, அவர்களுக்கு பிடித்த வேலைகளை செய்வதைத் தொடரலாம் என்று மற்ற பெற்றோருக்குக் காட்ட விரும்புவதாகக் கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios