• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அரிய நோய்களை தெரிந்து கொள்வோம்...

வருடாந்த EURORDIS புகைப்பட விருதுப் போட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரின் பார்வையையும் அரிய நோய்களின் பக்கம் திருப்புகிறது. அடுத்த ஆண்டு விருதுகளுக்கான புகைப்பட சமர்ப்பிப்புகள் ஜனவரி 31 வரை திறந்திருக்கும். பிரான்ஸை தளமாகக் கொண்ட EURODIS, அரிய நோய் அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். மேலும் அரிய நோய்களில் ஆர்வமுள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். 18 வயதிற்கு உட்பட்ட பங்கேற்பாளர்கள் பெற்றோரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு புகைப்படமும் உலகளவில் உள்ள சுமார் 7,000 அரிய நோய்களில் ஏதாவது ஒன்றைக் குறிக்க வேண்டும் அல்லது தொடர்புடையதாக இருக்க வேண்டும். புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் EURORDIS புகைப்பட விருதைப் பெறுவார். சென்ற வருடம் ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட விரைவாக வளரும் நோயை பிரதிபலித்த படம் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios