உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்ற மாதம் இந்த ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பனி நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நடேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதிலும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பின் மக்களும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குநிதி வழங்கி வருகின்றனர். இந்த தொகை தற்போது 1000 கோடியை எட்டியுள்ளதாக ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை சேர்ந்த விஷ்வ பிரசன்னா தீர்த்தஸ்வாமி தெரிவித்துள்ளார். மேலும் இது மக்களின் ஒருமைப்பாட்டை காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.