ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள கோவிட்-19 பயோமார்க்ஸர்களை விரைவாக அடையாளம் காணும் முயற்சியில் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி) ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி என்பது வேதியியல் பகுப்பாய்வு நுட்பமாகும். இது வேதியியல் கட்டமைப்பு, மூலக்கூறு பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இது ஒரு பொருளுக்குள் உள்ள வேதியியல் பிணைப்புகளுடன் ஒளியின் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது.

இக்குழுவின் படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழமான கற்றலைப் பயன்படுத்தி, கோவிட்-19 கண்டறிதல் செயல்முறையை விரைவானதாக ஆக்கும். மேலும் எந்தவொரு பிரித்தெடுத்தல் நடைமுறையும் தேவையில்லை என்று தலைமை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.