
முன்னாள் மத்திய நிதி செயலாளராக இருந்த ராஜீவ் குமார் இன்று இந்திய தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் ஆரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அசோக் லவாசா இவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார் பின்னர் தனது தேர்தல் ஆணையர் பதவியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்யிடம் கொடுத்தார். இதை தொடர்ந்து முன்னாள் நிதிசெயலாளர் ராஜீவ்குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.