உலக ரேடியோ தினம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. முகம் தெரியாத ரேடியோ ஜாக்கிகள் அவர்களின் குரல் மூலமாக நம்ம மகிழ்விக்கும் நிமிடங்களை நம்மால் மறக்க முடியாது. ஒரு முறையாவது ரேடியோவில் பேசிவிடமாட்டோமா? என்று ஏங்கி தவிக்கும் ரேடியோ பிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

அத்தகைய ரேடியோ தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஒடிஸாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய முயற்சியில் இறங்கி மரத்தாலான ரேடியோவை செய்து அசத்திய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 3,130 தீக்குச்சிகளை கொண்டு 4 நாட்கள் தொடர் முயற்சியில் சாஸ்வத் ரஞ்சன் என்ற இளைஞர் தீக்குச்சியாளான மாற ரேடியோவை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.