ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் சோஃபி லெஸ்டர் எனும் சிறுமி காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானிகளுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அவர்கள் ஒரு டிராகனை தனக்காக வடிவமைக்க முடியுமா என்று கேட்டு, அது ஒரு பெண்ணாக இருந்தால் 'டூத்லெஸ்' என்றும், அது ஒரு பையனாக இருந்தால் 'ஸ்டூவர்ட்' என்றும் பெயரிடுவேன் என்றும் எழுதி இருந்தாள்.

'வணக்கம் அன்பான விஞ்ஞானிகளே' என்று தொடங்கி, அவள் மேலும் கூறியதாவது: ‘நான் [டிராகனை] எனது சிறப்பு பச்சை புல் பகுதியில் வைத்திருப்பேன். நான் அதற்கு மீன்களை உணவளிப்பேன். மேலும் டிராகனுக்கு ஒரு காலரை அணிந்து விடுவேன். அது காயமடைந்தால் நான் அதற்கு மருந்திடுவேன். பள்ளி இல்லாதபோது ஒவ்வொரு வார இறுதியிலும் நான் அதனுடன் விளையாடுவேன், என்று எழுதி இருந்தது. ' டிராகன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டும் வண்ணம் ஒரு பயனுள்ள வரைபடத்தையும் அவள் சேர்த்துக் கொண்டாள். கணிக்கக்கூடிய வகையில், விஞ்ஞானிகளால் அவளுக்கு உதவ முடியவில்லை, இருப்பினும் அவர்கள் தங்கள் வலைத்தளத்தில் விரைவாக பதிலளித்தனர். அவர்கள் அளித்த பதில் என்னவென்றால்,'நாங்கள் 1926 முதல் விஞ்ஞானம் பயின்று வருகிறோம், நாங்கள் அடைந்ததைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் நாங்கள் இதை தவறவிட்டோம். 'கடந்த 87- ஆண்டுகளில் எங்களால் ஒரு டிராகன் அல்லது டிராகன் முட்டைகளை கூட உருவாக்க முடியவில்லை. தட்டான்களை கவனித்துள்ளோம் மற்றும் ஆண் டிராகன் என்று அழைக்கப்படும் சிறிய உயிரினத்தின் உடல் வெப்பநிலையையும் அளவிட்டோம். ஆனால் எங்கள் பணி ஒருபோதும் புராண, நெருப்பு சுவாச வகை டிராகன்களை உருவாக்கவில்லை. இதற்காக, நாங்கள் வருந்துகிறோம், என்றனர்.