எலிகளை வைத்து சோதித்ததில் என்.ஆர்.எஃப் 2 எனப்படும் புரதம், முதுமையை தாமதிக்கிறது.
சோதனைக்காக, 2018 இல் ஸ்பேஸ் X ராக்கெட்டில் 12 எலிகள் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.
இவற்றில் பாதி எலிகள் என்.ஆர்.எஃப் 2 என்ற புரதத்தைக் கொண்டிருக்காதபடி மரபணு மாற்றம் செய்யப்பட்டன.
என்.ஆர்.எஃப் 2 நீக்கப்பட்ட குழு,வயதானவர்கள் உடலில் நடப்பது போல இரத்தக் கூறுகளில் விரைவான மாற்றங்களை அனுபவித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புரதத்துடன் கொடுக்கப்பட்ட குழு அத்தகைய மாற்றத்தைக் காட்டவில்லை.
"விண்வெளியில் இருந்து பெறப்பட்ட மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைப்பதில் என்ஆர்எஃப் 2 வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன" என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய தோஹோகு பல்கலைக்கழக பேராசிரியர் மசாயுகி யமமோட்டோ மேற்கோளிட்டுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு அல்சைமர் நோய் மற்றும் நீரிழிவு போன்ற வயதானவர்கள் தொடர்பான நோய்களுக்கான புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது விண்வெளி பயணம் தொடர்பான சுகாதார அபாயங்களுக்கான தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்.
