இந்த ஆண்டு ஆப்பிளின் மிகச்சிறிய ஐபோன்(iphone mini) அதன் உரிமையாளர்களில் சிலருக்கு சில சிக்கல்களைத் தருவதாக புகார் எழுந்துள்ளது. ஐபோன் 12 மினி தொலைபேசியின் லாக் ஸ்க்ரீனை சுலபமாக உபயோகிக்க இயலவில்லை என்கின்றனர், வாடிக்கையாளர்கள்.

மேலும் சில பயனர்கள் கேமரா, ஒளிரும் விளக்கு பயன்படுத்தும் போதும் தங்கள் கட்டைவிரலால் தொலைபேசியைத் திறக்க ஸ்வைப் செய்யும் போதும் சிக்கல் பெறுவதாகக் கூறப்படுகிறது.
தொலைபேசி சார்ச்சில் செருகப்பட்டிருகந்தாலோ அல்லது பின்உறை இல்லாமல்
பயன்படுத்தினாலோ சிக்கல்கள் சரி செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இந்த பிரச்சினை எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சிக்கலுக்கு காரணம் எதுவாக இருந்தாலும், ஆப்பிள் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி அல்ல.