நீங்கள் கலை மற்றும் கட்டிடக்கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தாலும்
இல்லையென்றாலும், பிரியங்கா சோப்ராவின் லண்டன் இல்லத்தை பார்க்கும்போது பிரமிப்புக்குள்ளாவீர்கள். வீடு முழுவதும் கண்ணாடி மற்றும் லைட்டிங் காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

தி வைட் டைகர் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில்,தனது வீட்டின் ஒரு காட்சியைப் பகிர்ந்து கொண்டார். கதிர்வீச்சு செய்யும் கண்ணாடி வேலைகளோடு சிவப்பு விளக்குகளை ஒளிரச் செய்ததால், ஒரு கலைப் படைப்பு போல தோற்றமளித்தது.
பிரம்மை போல் தோன்றும் படிக்கட்டின் படத்தை நிக் ஜோனாஸின் நண்பரும் இசை தயாரிப்பாளருமான சேஸ் ஃபாஸ்டர் படம் பிடித்தார். சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் தனது வீடு பற்றிய ஒரு காட்சியைப் பகிர்ந்த பிரியங்கா, “இல்லம் ” என்று தலைப்பிட்டு, இதய எமோஜியுடன் நிறுத்தினார்.
பிரியங்காவின் உறவினரும், பாலிவுட் நடிகருமான பரினிதி சோப்ரா, அவர் பதிவுக்கு பதிலளித்து உள்ளார்.
தனது வெற்றி பட்டியலை நீடிக்கும் வகையில் பிரியங்கா இப்போது பிரிட்டிஷ் பேஷன் கவுன்சிலில் தூதராக உள்ளார்.