
சிறை அதிகாரி என்றால் கைதிகளிடம் கடுமையாக தான் நடந்து கொள்வார்கள் என்ற கருத்தை மாற்றும் வகையில் கைதிகளிடம் பணிவுடனும் , நேர்மையுடனும் நடந்து கொள்ளும் சிறை அதிகாரி ஒருவருக்கு அவரது சிறந்த சேவையை பாராட்டும் விதமாக குடியரசு தலைவர் விருது கிடைத்துள்ளது.
கேரளா, திருச்சூர் எருமப்பள்ளியை சேர்ந்த கே.வி. தாமஸ் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் கிளைசிறையில் கண்காணிப்பாளராக 1990 முதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவர் நன்னடத்தைகாக 23 விருதுகள் பெற்றுள்ளார். மேலும் 2005 இல் கேரளா முதல்வர் விருதும் பெற்றுள்ளார்.
கைதிகளிடம் அக்கறை காட்டும் போலீஸ்கார்!!!
சிறையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் கைதிகளிடம் காட்டும் கனிவு, பணியில் காட்டும் அக்கறை, நேர்மை மற்றும் கடமையுணர்வுக்காக 2015 இல் கே.வி தாமஸிற்கு குடியரசு தலைவர் விருது கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதிற்கு தேர்வாகி உள்ளதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.