
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக உத்தரபிரதேச அரசு ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் உத்தரபிரதேசத்தில் வாழும் மக்களுடைய இன்டர்நெட் கணக்குகளையும் , தேடப்படும் விஷயங்களையும் கண்காணிக்கும். மேலும் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தேடினால் நம்முடைய மொபைலுக்கு மெசேஜ் வரும் என கூறப்படுகிறது. அதோடு நில்லாமல் இச்ச்செயலில் தொடர்ந்து ஈடுபவர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்கள் என்ற கிரைமின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளது.