என்னதான் டெக்னலாஜி வளர்ந்து கொண்டே போனாலும், அன்று முதல் இன்று வரை இருக்கின்ற சில தொழில்களில் ஒன்று தான் மீன் பிடித்தல். உயிரை பணையம் வைத்து மீன் பிடிக்க செல்லும் மீனவனுக்கு கிடைக்கும் வருமானமும் ஒரே நிலையாக தான் உள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பது கேட்பதற்கு சற்று வருத்தமாக தான் உள்ளது.

இந்நிலையில் தான் ஒரு ஏழை மீனவன் ஒரே நாளில் கோடீஸ்வரரான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லந்தில் ஒரு ஏழை மீனவன் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது அவருக்கு அரிய வகை முத்து ஒன்று கிடைத்துள்ளது.
முத்தின் விலை 10 கோடிக்கும் மேல் !!!
அரிதிலும் அரிதான இந்த ஆரஞ்சு நிறத்தில் உள்ள மெலோ வகையை சேர்ந்த முத்துக்களை ஏழை மீனவன் கடலுக்குள் இருந்து எடுத்து கொண்டு வரும் போது அவனுக்கு தெரியவில்லை. இந்த முத்தின் விலை இந்திய மதிப்பில் 10 கோடிக்கு மேல் என்று! ஏழை மீனவன் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனா சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.