• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மழை காரணமாக டெல்லி காற்று தரத்தில் முன்னேற்றம்


டெல்லியின் சிலபகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழை பொழிவதைத் தொடர்ந்து அங்கு காற்று மாசுபாடு சற்று குறைந்துள்ளது . மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, காலை 6 மணிக்கு, டெல்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 162 ஆக இருந்தது.



பதிமூன்று காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களில் 200 க்கும் குறைவான AQI அளவுகள் பதிவாகியுள்ளன.


இந்தியவானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) மூத்த விஞ்ஞானி வி.கே. சோனி, வரும் வாரத்தில், பலத்த காற்றுமற்றும் மழை தொடரும் என்றார்.மேலும் இதனால் தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு குறைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.



ஐஎம்டிகணிப்பின்படி, செவ்வாயன்று காற்றின் திசை மீண்டும் கிழக்கிலிருந்து வடக்கு-மேற்கு நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பட்டாசு வெடிப்புகள் இப்போது குறைந்து வருகிறது, எனவே டெல்லியின் காற்று தரம் மேம்படப் போகிறது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios