ஒரு மசோதாவுக்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. அதில் காவல்துறையினர் தங்கள் கடமைகளைச் செய்யும் போது அவர்களை எந்த விதமான புகைப்படம் எடுப்பதும் ஒரு குற்றச் செயலாக மாறும் என்பது தான் மைய கருத்து.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், இது காவல் துறை வன்முறையை மறைப்பதற்கும் ஊடகங்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும் உட்படுத்துவதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்த மசோதா காவல் துறை பணியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று அரசாங்கம் கூறுகிறது.

மசோதாவிற்கான காரணம்:
இந்த வார தொடக்கத்தில், மூன்று போலீஸ் அதிகாரிகள் ஒரு இசை தயாரிப்பாளருக்கு எதிரான வன்முறை மேற்கொண்டனர். அதன் படங்கள் பிரெஞ்சு மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனினும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக இத்தகைய மசோதா எழும்பி உள்ளது.
இதனைத் தொடர்ந்து பாரிஸில் குடியரசு சதுக்கத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் கூடிவருவதால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
காவல் துறை மீது பட்டாசு வீசிய போராட்டக்காரர்களுக்கு எதிராக பாரிஸ் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதல் மீண்டும்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.