ஒரு அதிரவைக்கும் வீடியோ பதிவில், ஒரு முதியவர் ரயிலால் நசுக்கப்படவிருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த சம்பவம் மும்பையின் தஹிசர் ரயில் நிலையத்திலிருந்து தெரிவிக்கப்பட்டு, சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

சி.சி.டி.வி காட்சியில் 60 வயதான கண்பத் சோலங்கி என அடையாளம் காணப்பட்டது. அவரது காலணிகளில் ஒன்று விழுவதால்,அவர் அதை எடுத்துக்கொண்டு, அதை அணிய இரயில் பாதையின் மறுபக்கத்திற்கு நகர்கிறார், அதே நேரத்தில் காவல்துறையினர் இரயில் நெருங்கி வருவதைப் பற்றி எச்சரிக்கிறார்கள். இருப்பினும், அதற்கு அதிக கவனம் செலுத்தாமல், சரியான நேரத்தில் நடைமேடையில் தாவிவிட முடியும் என்று நினைத்து பாதையில் நடந்து சென்றுள்ளார். காவலர் சரியான நேரத்தில் செயல்படாமல் இருந்திருந்தால் அவரை இரயில் நசுக்கியிருக்கும். அந்த நபரை மேடையில் ஏறீறியவுடன், போலிசார் அவரை விரக்தியில் அறைவதையும்வீடியோவில் காணலாம்.