திருமணம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் ஆடம்பரமான ஒன்றாக மாறிவிட்டது. திருமணத்தில் முக்கிய பங்கு வகிப்பது போட்டோ ஷூட் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பொதுவாக திருமணத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. வேட்டி சட்டை அல்லது கோட் ஷூட் போட்டாலே ஒரு கல்யாண மாப்பிள்ளைக்குரிய கலை இயல்பாகவே ஆண்களுக்கு வந்துவிடும்.
ஆனால் பெண்களுக்கு பட்டுப்புடவை, அதற்க்கு மேட்சான பிளவுஸ், மேக்கப், ஜுவல்ஸ், மெகந்தி என தனி பட்டாளமே உண்டு. மணமேடையில் நிற்கும் பொது கல்யாண பொண்ணு மட்டும் தனியாக ஜொலிப்பாள். கல்யாணத்திற்கு வரும் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ கல்யாண பெண்ணை சற்று பார்த்து ரசித்துவிட்டு தான் செல்வார்கள்.

கல்யாணம் தொடங்குவதற்கு முன் இருந்து கல்யாணம் முடிந்த பிறகு வரை, மணமக்களை போட்டோ எடுக்கும் போட்டோ காரர் கொஞ்சம் ரசனை உள்ளவராக இருந்ததால் கல்யாண மேடையில் ஒரு விபரீதம் அரங்கேறியுள்ளது. போட்டோகாரர் கல்யாண மாப்பிள்ளையை, ஓரமாக தள்ளி நிற்க சொல்லிவிட்டு, கல்யாண பொண்ணை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததால் கோபமடைந்த மாப்பிள்ளை, போட்டோகாரரின் கழுத்தை சேர்த்து பளார் என்ற அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.