• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வலம் வரும் ஹாங் சான் டூங் குகை - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!!!



9 கிலோ மீட்டர் நீளத்துடன் 40 மாடி கட்டிடம் கட்டும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகின்ற ஹாங் சான் டூங் குகையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதிசயத்தை மிஞ்சும் அற்புத குகை !!

வியட்நாமின் டிராக் குவாங் பிங்கில் அமைந்துள்ள ஹாங் சான் டூங் என்ற குகை உலகத்திலேயே மிக பெரிய குகையாக கருதப்படுகிறது. இந்த குகையில் 150 தனித்தனியான குகைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. ஒரு குகை என்றால் இருட்டாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு, புல்வெளிகள், ஆறுகள், மணற்பரப்பு, காடுகள், கட்டு உயிரனங்கள் மற்றும் திறந்த வெளி மேகங்கள் என அனைத்தும் இந்த குகையில் காணப்படுவது அனைவரையும் வியப்பும் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது.


வலம் வரும் வவ்வால்கள் !!!

1991 ஆம் ஆண்டு ஹோ ஹாங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு 2013 ஆம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டது.இந்த குகையின் உருவாக்கம் பலலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய ஆற்றின் படிவினால் தான்! என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.





இந்த குகையில் பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வசிக்கின்றன. இந்த குகை 40 மாடி கட்டிடம் காட்டும் அளவிற்கு வானளவு உயர்ந்து காணப்படுவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.மேலும் இக்குகையின் வெளித்தோற்றம் காடுகள் அடர்ந்த சோலைவனம் போல காட்சி அளிக்கிறது. மணல் மேல் படிந்த நீர் துளிகளால் அழகிய படிமானங்கள் பல இங்கு காணப்படுகின்றன.









Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios