தற்போதைய சூழ்நிலையில், பார்மசி இந்தியாவில் மிகவும் சிறப்பான தொழில்முறை படிப்புகளில் ஒன்றாகும். சமீபத்திய முன்னேற்றங்களுடன், இது மருத்துவ படிப்புகளுக்கு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது.

தேசிய மற்றும் மாநில அளவிலான மருந்தக நுழைவுத் தேர்வுகளை அறிய செய்தியைத் தொடர்ந்து படியுங்கள்.
பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட் (ஜி.பி.ஏ.டி), எம். பார்ம் அல்லது அதற்கு சமமான படிப்புகளை நாடு முழுவதும் வழங்குவதற்காக நடத்தப்படுகிறது. ஜி.பி.ஏ.டி நுழைவுத் தேர்வின் அடிப்படையில், 39,670 முதுநிலை மருந்தியல் (எம்.பார்ம்) இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
NIPER JEE என பொதுவாக அறியப்படும் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டு நுழைவுத் தேர்வு, முதுகலை மருந்தியல் (எம்.பார்ம்) மற்றும் பி.எச்.டி.படிப்பிற்கான தேர்வு ஆகும். இது அகமதாபாத், குவஹாத்தி, ஹாஜிபூர், ஹைதராபாத், கொல்கத்தா, ரெய்பரேலி மற்றும் எஸ்.ஏ.எஸ் நகர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
என்.பி.ஏ.டி நுழைவுத் தேர்வு மும்பை, ஷிபூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
மேலும் மும்பையில் NMIMS தேர்வு, சட்டிஸ்கரில் PPHT தேர்வு,ராஜஸ்தானில் RUHS தேர்வு மற்றும் ஆந்தராவில் EAMPCET தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன.