விலங்குகள் வளர்ப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. முதன் முதலாக நாய் வேட்டைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வளர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்பொழுது போமெரியன், லெப்ரேட்டர், உள்ளிட்ட பல்வேறு நாய்களும் அதோடு பூனைகளும் வீட்டு விலங்காக வளர்க்கப்படுகிறது.
விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளை வளர்க்கிறேன் என்ற பெயரில் அதோடு செலஃபீ எடுப்பது, ஸ்டண்ட் செய்ய வைப்பது, அதோடு வீடியோ எடுப்பது போன்ற செயல்கள் செய்து மனிதர்கள் மிகவும் துன்புறுத்துவதாக விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு, விலங்குகள் துன்புறுத்தும் தடுப்பு சட்டத்தின் கீழ், 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 75000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.