விஞ்ஞானிகள் பேட்டரிகளை இயக்கக்கூடிய ஒரு கனிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வில், 'பெட்ரோவைட்'{ Na10CaCu2 (SO4) 8} என்ற அழகிய நீல கனிமத்தை கண்டு எடுத்தனர். மேலும் சோடியம் அயன் பேட்டரிகளுக்கான கேத்தோடு( cathode) பொருளாக இதைப் பயன்படுத்தலாம்.

பெட்ரோவைட் என்பது பளபளப்பான நீல நிற தாது ஆகும்.
இந்த தாது ஆக்ஸிஜன் அணுக்கள், சோடியம் சல்பர் மற்றும் செம்பு ஆகியவற்றால் ஆனது.
பேராசிரியர் ஸ்டானிஸ்லாவ் ஃபிலடோவ், டோல்பாச்சிக் எரிமலைக்குள் பெட்ரோவைட் கண்டுபிடிக்கப்பட்டது என்றார். மேலும் 1975-1976 மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு எரிமலை வெடிப்புக்கு பிறகு இந்த கனிமம் வெளிவந்துள்ளது.