லண்டன் தொண்டு நிறுவனமான அக்யூமுலேட் ஒரு "நேர்மையான, வேதனை நிறைந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இப்புத்தகம் 18 வெவ்வேறு நபர்களின் கதைகளையும், வீடு இல்லாமல் வாழும் கசப்பான அனுபவங்களையும் எடுத்துரைக்கின்றது.

இது160 க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது.மேலும் வீடற்று வாழ்வோரால் உருவாக்கப்பட்ட படத்தொகுப்புகள், காமிக்ஸ், கவிதைகள் மற்றும் உரைநடை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் தொண்டு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு மூன்று மாத காலத்தில் உருவாக்கப்பட்டது.
நீங்கள் வீடற்றவர்களாகவும், ஒரு ஹாஸ்டலில் வசிக்கிறவராகவும் இருந்தால், உங்கள் காலை உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் உண்ண முடியும். சிலநேரங்களில் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று தேர்வு செய்ய கூட முடியாது. எனவே இது அவர்களின் கதை, அதைச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு என்பது எனக்கு மிகவும் முக்கியமானது, என்று அக்யூமுலேட் நிறுவனர் மாரிஸ் காம்பர் கூறினார்.
இதன் விளைவாக அக்யூமுலேட் "வீடற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் கிராஃபிக் நாவல்" என்ற சிறப்பைப் பெற்றது.