அண்டார்டிகாவிலிருந்து கண்டு எடுத்த புதைபடிவங்கள் பிரம்மாண்டமான பறவை இனத்தைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.
1980 களில் அண்டார்டிகாவிலிருந்து மீட்கப்பட்ட புதைபடிவங்கள் தென் பெருங்கடல்களில் வாழ்ந்து அழிந்துபோன பெலகோர்னிதிட்கள்(pelagornitids) என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை பொய் பல் பறவைகள் எனவும் அழைக்கப் படுகிறது.
இந்த பறவைகளின் சிறகுகள் 21 அடி நீளமானவை.
கண்டுபிடிப்பின் பின்னால் உள்ள அமெரிக்க மற்றும் சீன ஆராய்ச்சியாளர்களின் குழு,இந்த பறவைகள் டைனோசர்கள் அழிந்த பின்னர் பரிணாமம் அடைந்தன என்று நம்புகின்றனர். இந்த இனத்தின் கடைசி பறவை 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பனி யுகங்கள் தொடங்கிய காலம் வரை வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெலகோர்னிதிட்கள் அவற்றின் தாடைகளின் அமைப்பால் 'எலும்பு பல் பறவைகள்' என்று அழைக்கப்படுகின்றன. இதன் பற்கள் மனிதர்களின் பற்களைப் போல இல்லை.அவை கெரட்டின் என்ற கொம்புப் பொருளால் ஆனவை, இது நம் விரல் நகங்களைப் போன்றது. பற்களை பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கும் என்கின்றனர்.