• Facebook
 • Twitter
 • YouTube
 • Instagram

மீண்டும் மலரும் நாளந்தா ...

முன்னுரை


இந்தியாவின்பீகார்மாநிலத்தின்தலைநகர்பாட்னாவிலிருந்துதென்கிழக்குத்திசையில் 84 கி.மீதொலைவில்வரலாற்றுசிறப்புமிக்கநாளந்தாபல்கலைக்கழகம்அமைந்திருக்கிறது. “நாளந்தா” என்றபெயர் 3 சமஸ்கிருதசொற்களின்கலவையிலிருந்துஉருவானது: “நா”, “ஆலம்” மற்றும் “டா”, அதாவது ‘அறிவின்பரிசைநிறுத்தவேண்டாம்’(no stopping of the gift of knowledge)என்பதுபொருளாகும். 14 ஹெக்டேர்பரப்பளவுள்ளபல்கலைக்கழககட்டிடம்செங்கற்களால்ஆனது. இந்தியாவின்மிகப்பெரியமுதல்குடியிருப்புபல்கலைக்கழம்என்றபெருமையையும்பெற்றிருந்தது. இப்பல்கலைக்கழகம்கி.பி5ஆம்நூற்றாண்டில்நரசிம்மதேவாகுப்தாபேரரசின்ஆட்சிக்காலத்தின்

கீழ்கட்டப்பட்டது. கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேசியா, கிரேட்டர்ஈரான், பெர்சியா, கிரீஸ், மங்கோலியாமற்றும்இன்னும்பலநாடுகளில்இருந்துவந்த 10,000 மாணவர்கள்மற்றும் 2,000 ஆசிரியர்களுடன் 800 ஆண்டுகள்சிறப்புவாய்ந்ததாகஇருந்தது. உலகம்முழுவதிலும்இருந்துபல்வேறுதுறையைச்சார்ந்தஆராய்ச்சிமாணவர்கள்இந்தபல்கலைக்கழகத்திலிருந்துபடித்துஅறிஞர்களாகதிகழ்ந்தனர். உலகஅளவில்உயரியபதவிகளைப்பெற்றுசிறந்துவிளங்கினார். புத்ததுறவிகள்தியானத்திற்குஏற்றஇடம்உருவாக்குவதற்காகவும், மிகவும்முறைப்படுத்தப்பட்டவேதகற்றல்அடிப்படைநோக்கத்தைக்கொண்டிருந்ததால்நாளந்தா, டாக்ஸிலாமற்றும்விக்ரமாஷிலாநிறுவப்பட்டது.


தர்ம கஞ்ச் நூலகம்


நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகம் தர்ம கஞ்ச் என்று அழைக்கப்பட்டது, இதன் பொருள் “சத்தியத்தின் கருவூலம் /மலை” (Treasury of Truth / Mountain of Truth) என்பதாகும். இந் நூலகம் மூன்று பெரிய கட்டிடங்களாக பரவியிருந்தது . ஒவ்வொரு கட்டிடத்திற்கும் தனித்த தனியாக ரத்னசாகரா, ரத்னாதாதி மற்றும் ரத்னராஞ்சக என்று பெயரிடப்பட்டது. அதில் ரத்னசாகரா மட்டும் ஒன்பது மாடி அரிய புனித கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருந்தது. மதம், இலக்கியம், ஜோதிடம், வானியல், மருத்துவம் நுண்கலை, கணிதம், அரசியல் மற்றும் போர் கலை உள்ளடக்கிய ஏராளமான புத்தகங்களைக் கொண்டிருந்தது. பாலி மொழி இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப் பட்டது. நூலகம் மிகவும் பரந்ததாகவும் வலுவாகவும் இருந்தது, இப்பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்க படித்த அறிஞர்கள் சிலர் : ஹர்ஷவர்தனா, வசுபந்து, தர்மபால், சுவிஷ்ணு, அசங்கா, தர்மகீர்த்தி, சாந்தரக்சிதா, நாகார்ஜுனா, ஆரியதேவா, பத்மசம்பவா, ஜுவான்சாங் மற்றும் ஹூய் லி ஆகியோர் அடங்குவர். சிறந்த வானியலாளரும் கணிதவியலாளருமான ஆர்யபட்டா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.முஹம்மது பக்தியார் கில்ஜி பற்றி...


முஹம்மது பக்தியார் கில்ஜி என்றும் அழைக்கப்படும் இக்தியார் அல்-தின் முஹம்மத் பக்தியார் கில்ஜி ஒரு இராணுவ ஜெனரலாக இருந்தார். இவர் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள கார்ம்சிர் நகரில் பிறந்தார். அவர் துருக்கிய கலீஜ் இணத்தை சேர்ந்தவராக இருந்தார். இந்தியாவில் கில்ஜி என்று அழைக்கப்பட்டார். 1192 CE இல் பிருத்விராஜ் சவுகான் டெல்லியில் தோற்கடிக்கப்பட்டார்.

கில்ஜிக்கு மிர்சாபூர் மாவட்டத்தில் ஜாகிர் பதவி வழங்கப்பட்டது. விரைவில் அவர் பீகார் மற்றும் வங்காள நிலங்களின் மீது தனது இராணுவத்தை வலுப்படுத்தினார். இந்நிலையில், 80 வயதான இந்து மன்னர் லட்சுமண சேனா (1178-1206) நாடியாவில் மனநிறைவோடு இருந்தார். 1200 CEல் கில்ஜி பீகாரை அடிமைப்படுத்தினார். 1204 CEல் மன்னர் லட்சமண சேனா மீது தாக்குதல் நடத்தி கில்ஜி விரைவில் வங்காளத்தின் ஆட்சியாளரானார்.


நாளந்தா மீதான தாக்குதல் : அதிகம் அறியப்படாத கதை


இப்பல்கலைக்கழகம் பல்வேறு நாட்டினர் படையெடுப்புகளால் அவ்வப்பொது சீர்குலைந்தது. ஹன்ஸ், கவுடாஸ் மற்றும் பக்தியார் கில்ஜி படையெடுப்பாளர்களால் மூன்று முறை தாக்கப்பட்டது. பக்தியார் கில்ஜி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவரை குணப்படுத்த அவரது நீதிமன்றத்தில் மருத்துவர்கள் (ஹக்கீம்கள்) தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டவராக இவர் இருந்தார். கில்ஜிக்கு நாளந்தா பல்கலைக்கழக ஆயுர்வேத அறிஞர் ராகுல் ஸ்ரீ பத்ராவால்லிடம் குணப்படுத்திக் கொள்ளுமாறு ஒருவர் அறிவுறுத்தினார். தனது மதத்திற்கு புறம்பாக ஒருவர் தன்னை குணப்படுத்துவது அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது. பத்ராவை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. கில்ஜி ஒரு நிபந்தனை முன் வைக்கிறார். எந்த மருந்துகளும் இல்லாமல் அவரை குணப்படுத்த வேண்டும் என்று பத்ராவிடம் கூறினார். பத்ரா கில்ஜியிடம் குரானில் இருந்து சில பக்கங்களைப் படிக்கச் சொன்னார். ஆச்சரியமாக கில்ஜி குணமடைந்தார். தனது சொந்த நீதிமன்றத்தின் ஹக்கீம்களை விட அதிகமாக பத்ரா அறிந்திருந்ததால், கலக்கம் அடைந்த கில்ஜி அனைத்து அறிவின் வேர்களை வேரூன்றி நாட்டிலிருந்து அழிக்க முடிவு செய்தார். அவர் நாளந்தாவின் பெரிய நூலகத்திற்கு தீ வைத்தார். இவரால் தீயிட்டு அழிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலகம் மூன்று மாதங்கள் எரிந்ததாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 9 மில்லியன் கையெழுத்துப் பிரதிகளை எரித்தார். துருக்கிய படையெடுப்பாளர்கள் பல்கலைக்கழகத்தில் துறவிகள் மற்றும் அறிஞர்களையும் கொலை செய்தனர். 12-ஆம் நூற்றாண்டில் துருக்கிய ராணுவப் படையால் அழிக்கப்பட்டது.


யுனெஸ்கோ


துருக்கியின் இஸ்தான்புல் நகலரில் அண்மையில் நடைப்பெற்ற 40-வது உலகப் பாரம்பரிய குழுக் கூட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களை யுனெஸ்கோ அறிவித்தது. உலகம் முழுவதும் தீவிர ஆய்வுக்குப்பின் 9 இடங்களை தேர்வு செய்தது. நாளந்தா பல்கலைக்கழகம் அந்தப் பட்டியலில் இணைத்துள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.காலவரிசை

 • 9 டிசம்பர் 2006 அன்று, நியூயார்க் டைம்ஸ் நாலந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க 1 பில்லியன் டாலர் செலவழிக்கும் திட்டத்தை விவரித்தது.

 • சிங்கப்பூர் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகள் உட்பட ஒரு புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க 500 மில்லியன் டாலர்களையும், தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க 500 மில்லியன் டாலர்களையும் திரட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன

 • ஆகஸ்ட் 15, 2007 அன்று, டைம்ஸ் ஆப் இந்தியா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் காலம் அவர்கள் செப்டம்பர் 2007 இல் நாளந்தா சர்வதேச பல்கலைக்கழகத்தை புதுப்பிக்ப்பதற்கான வாய்ப்பைஏற்றுக்கொண்டார். ஆனால் பின்னர் அவர் திட்டத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

 • 16 டிசம்பர் 2010 அன்று, சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் தனது இந்திய பயணத்தின் போது நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பங்களித்தார்.

 • 15 நவம்பர் 2011 அன்று, எகனாமிக் டைம்ஸ் இந்தியாவுக்கான சீனாவின் தூதர் ஜாங் யான் ஒரு சீன வகை நூலகத்தை கட்டியதற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் காசோலையை ஒப்படைத்ததாக அறிவித்தார்.

 • 6 ஜூலை 2015 அன்று, சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் யியோ, நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.

 • விஜய் பாண்டுரங் பட்கர் புதிய அதிபராக 25 ஜனவரி 2017 அன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாளந்தா பல்கலைக்கழகத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

 • ஜப்பான் கனசாவா பல்கலைக்கழகம் கல்வி ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


லுப்னாசுரையா

Subscribe to Our YouTube Channel

 • Facebook
 • Twitter
 • Instagram
 • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios