மொரிஷியஸில் சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஈகோ-சுட் மருத்துவ ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கடந்த கோடையில் வகாஷியோவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அங்குள்ள ஆறு பேரில் ஒருவருக்கு சில நோய் அறிகுறிகளைப் காணப்படுகின்றன. எண்ணெய் கசிவைச் சுற்றியுள்ள ஒன்பது கிராமங்களில் செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 3 வரை 277 பேர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் 45 எண்ணெயுடன் நேரடியாக இணைக்கப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த அறிகுறிகளில் சுவாசக் கோளாறுகள், தோல் பிரச்சினைகள் (குறிப்பாக தோல் எரிச்சல்), கண் பிரச்சினைகள் (குறிப்பாக கண் சிவத்தல் மற்றும் கண் எரிச்சல்), தலைவலி மற்றும் பல் பிரச்சினைகள் (பல உள்ளூர்வாசிகள் உள்ளூர் கடல்நீரை வாய்வழி சுகாதாரத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்) ஆகியவை அடங்கும். கசிந்த எண்ணெய் ஒரு சோதனை வகை எரிபொருள் ஆகும். இது சல்பர் வி.எல்.எஸ்.எஃப்.ஓ கப்பல் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது மொரீஷியஸ் கடற்கரையில் முதல் முறையாக கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.