ஆக்டோபஸ்கள் மீன்களைக் குத்துகின்றன. சில நேரங்களில் ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் மற்ற நேரங்களில், வேண்டுமென்றே காரணமே இல்லாமல் குத்துகின்றது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த நடத்தை வீடியோவில் பிடித்தனர். முதல் முறையாக ஆராய்ச்சியாளர் எட்வர்டோ சம்பாயோ இந்த நிகழ்வைக் கண்டவுடன் அவர் சிரித்தார்.

இதற்கு முன்னர் ஆக்டோபஸ்கள் மீன்களைக் குத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருந்தாலும், இந்த சூழல் புதிதாக இருந்தது.
"சில குத்துக்கள் ஒரு சிறிய அடி போன்று இருந்தது .சில குத்துகளைப் பார்த்தால் முழுக் கைகளும் சுருண்டு, குத்துச்சண்டை வீரர் ஒரு பஞ்சைச் செய்வது போல உங்களுக்குத் தெரியும். இந்த செயல் மிகவும் அரிதானவை, எனவே அதைக் கவனிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று சம்பாயோ கூறினார்.