கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை நடவடிக்கைகளைக் கேலி செய்யும் டிக்டோக் வீடியோவை வெளியிட்ட ஓரிகானைச் சேர்ந்த ஒரு செவிலியரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அசல் இடுகை நீக்கப்பட்டது, இருப்பினும் வேறு சில பயனர்கள் அதன் நகலை உருவாக்கி மறுபதிவு செய்தனர். புற்றுநோயியல் செவிலியரான ஆஷ்லே கிரேம்ஸ் முன்னெச்சரிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். கிரேம்ஸ், அக்டோபர் 2010 இல் சான்றளிக்கப்பட்ட நர்சிங் உதவியாளராக (சி.என்.ஏ) ஆனார் மற்றும் பதிவுகளின்படி 2015 முதல், நர்ஸாக பணியாற்றி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஸ்டெதாஸ்கோப் அணிந்திருந்தார். அவர் பேசிய இடம் ஒரு மருத்துவமனை ஓய்வறையாகத் தோன்றியது.
மேலும் அதில் அவர் நான் முகமூடி அணிவதில்லை என்றும் தனிமைப்படுத்தி கொள்வதில்லை என்றும் கூறினார். இதனையடுத்து தனது குழந்தைகளும் வெளியே விளையாடுவதாகத் தெரிவித்தார்.
"ஒரு செவிலியர் அடிப்படை கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கண்டிக்கத்தக்கது" என்று பலர் இந்த இடுகையில் கருத்து தெரிவித்தனர்